மிட்டாய் கவிதைகள்!

கல்லூரிக் கனவிலே

July 23, 2013

kalloori kanavile

கண்ணுக்கு எட்டாத
தொலைவில் இருப்பவன்
கண்ணின் உள்ளே
நீராய் வருகிறான்!

கேலி கிண்டல்கள்
நிறைந்த அறைகளில்
குப்பைக் கூளங்கள்
சிதறிக் கிடக்குதே!

சேர்த்து வைத்த
வகுப்பறை மேசைகள்
வருகைப் பதிவினை
வெறித்துப் பார்க்குதே!

கரம்கோர்த்து நடந்த
சாலை ஓரங்கள்
கட்டித் தழுவிட
பாதை மாற்றுதே!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்